#BREAKING : இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி-யை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசுகிறார்.
தமிழகத்தில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு காரணமாக, சமீப காலமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பல மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகளும் இழப்புகளை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி-யை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசுகிறார். ராஜ்பவனில் காலை 11 மணிக்கு ஆளுநரை சந்தித்து பேச உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025