வணிகவரித்துறையில் மாநில கட்டுப்பாட்டு அறை – தமிழக அரசு அரசாணை!

வணிகவரித்துறையில் மாநில கட்டுப்பாட்டு அறை அமைப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 06.09.2021 அன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற வணிகவரிக்கான கோரிக்கைகள் தொடர்பான விவாத்தின்போது, “வணிகவரித் துறையில் செயல்படும் சுற்றும் படைகளின் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்கும் fasTag உடன் இணைந்த மின்னணு வழிப் பட்டி மூலம் சந்தேகப்படக்கூடிய வாகனங்களைக் கண்டறிந்து, சுற்றும் படைகளிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காகவும் ‘மாநில கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும். இந்த கட்டுப்பாட்டு அறையில் அலுவலர்கள் 24×7 சுழற்சி முறையில் பணியாற்றுவர். இக்கட்டுப்பாட்டு அறைக்கு உரிய உபகரணங்களோடு கூடிய கட்டமைப்பு வசதிகள் ரூ.3.86 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.”,என்று வணிக வரிகள் மற்றும் பதிவுசெய்தல்துறை அமைச்சர் மூர்த்தி அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,வணிகவரித்துறையில் மாநில மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அறையை உருவாக்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இந்த கட்டுப்பாட்டு அறை 24/7 செயல்படும் மற்றும் உதவி கமிஷனர் கேடர் அதிகாரி தலைமையில் செயல்படும் மற்றும் வணிக வரி அதிகாரி மற்றும் துணை வணிக வரி அதிகாரி ஆகியோருக்கு உதவியாக இருக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.