#BREAKING: தமிழகத்தில் மேலும் 5,951 பேருக்கு கொரோனா.! 107 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,951 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,270 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,27,949 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,721 ஆக உயர்ந்துள்ளது.
இன்று உயிரிழந்தவர்களின் 65 பேர் அரசு மருத்துவமனையிலும், 42 பேர் தனியார் மருத்துவமனையிலும் இறந்துள்ளனர். கொரோனாவில் இருந்து இன்று 6,998 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,32,455 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 70,221 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 43,46,861 -ஐ கடந்துள்ளது. மேலும் 52,128 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!
July 2, 2025
அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!
July 2, 2025