தேர்தல் தோல்விக்கு பின் முதல்முறையாக பிரதமர் மோடியை சந்தித்த ஈபிஎஸ் – ஓபிஎஸ்.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த சந்திப்பின் போது, அதிமுக மூத்த தலைவர்கள் மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம், தம்பி துறை உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது, அரசு மற்றும் அரசியல் சார்ந்த விவகாரங்கள் தொடர்பாக பேசப்படவுள்ளது.
அதன்படி, சசிகலா விவகாரம், அதிமுக – பாஜக கூட்டணி, அரசியல் சூழல், உள்ளாட்சி தேர்தல், மேகதாது விவகாரம், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வியடைந்த பின் முதல்முறையாக ஈபிஎஸ் – ஓபிஎஸ் சந்தித்து பேசுகின்றனர்.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…