#Breaking:ஈபிஎஸ் – முன்னாள் உதவியாளரின் நண்பர் கைது!

சேலம்:அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.37 கோடி பணமோசடி புகாரில்,ஈபிஎஸ் அவர்களின் முன்னாள் தனி உதவியாளர் மணியின் நெருங்கிய நண்பர் செல்வகுமாரை இன்று சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம்,ஓமலூர் தின்னப்பட்டி அடுத்த பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி.இவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் 10 ஆண்டுகால தனி உதவியாளராக இருந்து வந்தவர்.
இந்த நிலையில்,அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி,பணமோசடி செய்ததாக நெய்வேலியினைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,முன்ஜாமீன் கோரிய மணியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன்பின்னர்,பணமோசடி செய்த புகாரில் மணியை,கடந்த நவம்பர் மாத இறுதியில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில்,அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.37 கோடி பணமோசடியில் ஈடுபட்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அவர்களின் முன்னாள் உதவியாளர் மணியின் நண்பர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.3 மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து வந்த செல்வக்குமாரை சேலம் மாவட்டம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025