தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இதற்கு இடையில் தமிழகத்தில் வருகின்ற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினம் மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும் தமிழகத்தில் பல இடங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் வெளியிட்ட உத்தரவில், ஊரக உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் நாளை முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .23 24 26 31 ஆகிய 4 தேதிகளில் விடுமுறையை சனிக்கிழமைகளில் கல்லூரி பல்கலைக் கழகங்களுக்கு வகுப்புகள் நடத்தி ஈடு செய்ய வேண்டும்.ஜனவரி 2-ஆம் தேதி முதல் தான் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் தொடங்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…