கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு அரசு மேகதாது அணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஏற்கனவே தமிழக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணையாக இருந்தாலும், மற்ற எந்த அணையாக இருந்தாலும், கட்டுவதற்கு அனுமதி வழங்க முடியாது. தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. தமிழகத்திற்கு எந்த நிலையிலும், தண்ணீர் பாதிப்பு ஏற்படாத வகையில் தான் எந்த நடவடிக்கையும் இருக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக முதல்வரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, மேகதாது அணை குறித்து இரு மாநில பிரதிநிதிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்துள்ளார்.
மேலும், மேகதாது அணை கட்டுவது தமிழகத்தை பாதிக்காது என்றும், இந்த பிரச்சனையை சுமுகமாக முடித்துக் கொள்ள வேண்டும் என்றும், மேகதாது அணை கட்டுவதால் தமிழகம், கர்நாடக ஆகிய இரு மாநிலங்களும் பயன்பெறும் என்றும்,, மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என் நம்புவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…