#BREAKING: ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார் எல்.முருகன்!

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார்.
மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார் என்று பாஜக தலைமை அறிவித்ததை அடுத்து, மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் முன்னிலையில் கடந்த 21ம் தேதி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் மத்திய இணைய அமைச்சர் எல். முருகன் போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ராஜ்யசபா உறுப்பினராக எல்.முருகன் பதவியேற்றுக்கொண்டார். இணை அமைச்சர் எல்.முருகனுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025