வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் , திருவாரூர் ,புதுக்கோட்டைமற்றும் நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் , சென்னையில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது .
இந்நிலையில் சென்னை , செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்த மழையானது இன்று காலை முதல் தீவிரமடைந்து கனமழையாக பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மயிலாப்பூர், கொளத்தூர், வேளச்சேரி, கே.கே.நகர், பெரும்பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கு முன் புதுக்கோட்டை , சிவகங்கை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…