#BREAKING: பல்லடம் கொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

Arrest

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சோணை முத்தையா என்பவரை கைது செய்துள்ளதாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சோணை முத்தையா என்பவர் கைதானார். 4 பேரை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி வெங்கடேஷை தேடும் பணி  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்தில் மது அருந்திய நபர்களை தட்டிக் கேட்ட நபர் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து வருகிறது. கொலையாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் உறவினர்கள் நேற்று முழுவதும் ஈடுபட்ட நிலையில், கொலையாளிகளை கைது செய்யும் வரை இறந்தவர்களின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி இறந்தவர்களின் உடலை வாங்காமலேயே திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்துவை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இன்று சோணை முத்தையா என்பவரை கைது செய்து, முக்கிய குற்றவாளியை காவல்துறை வலைவீசி தேடி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்