[Image Source : Twitter/@sunnewstamil]
சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி.
சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதாவது, மெரினா கடற்கரையில் கடலுக்கு நடுவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக அமைக்கப்படவுள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசின் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கிய நிலையில், கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்துள்ளது. அதில், ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.
கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக்கூடாது. திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அவசரகால மீட்புப்பணி தொடர்பான விரிவான திட்டம் தீட்டப்பட்ட வேண்டும். ஆமை இன பெருக்க காலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது. தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் மண் அரிப்பு, மணல் திரட்சி உள்ளிட்டவை குறித்து கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏதேனும் தவறான, போலியான தகவல் தெரியவந்தால் அனுமதி வாபஸ் பெறப்படும் எனவும் தெரிவித்து, 15 நிபந்தனைகளுடன் பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் பேனா நினைவு சின்னம் ரூ.81 கோடியில் அமைகிறது. அனைத்து அனுமதிகளும் கிடைத்திருப்பதால் விரைவில் பணிகளை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது.
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…