மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாக ரஜினிகாந்த் அறிவிப்பு.
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வரவில்லை என கூறிய பின், முதல் முறையாக மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்துள்ளார். தான் அரசியலுக்கு வரவில்லை என கூறிய பின், மக்கள் மன்ற நிர்வாகிகள் வேறு கட்சியில் இணையும் நிலையில், இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது அதை விளக்கவேண்டியது என்னுடைய கடமை.
நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும், பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம். ஆனால், கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால், ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன், ரஜினி மக்கள் மன்றம், மக்கள் நலப்பணிக்காக முன்பு போல இனி ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் முடிவை ஏற்பதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…