புதுக்கோட்டை:சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 6 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன்,இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆடுகளை திருடிச் சென்ற திருடர்களை பிடிக்க சென்றுள்ளார்.அப்போது அவர் திருடர்களை விரட்டி சென்றதாக கூறப்படும் நிலையில்,அவர்களுக்கும் காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும்.இதில் அவர்கள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நள்ளிரவு 2 மணிக்கு நடந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,ஆடு திருடர்களை பிடிக்க பூமிநாதன் அவர்கள் இருசக்கர வாகனத்தில் துரத்தி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியது.
இந்நிலையில்,புதுக்கோட்டையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆடு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 6 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…