சென்னை:ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும் என்று நிறுவனத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,ஒப்பந்த தொழிலாளர்களின் சூழ்நிலைகளை மேம்படுத்தவும், அவர்கள் தங்கும் விடுதிகளின் தரத்தை உயர்த்தி தரவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட பெண்களில் 116 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து,தரமற்ற உணவை உட்கொண்ட எட்டு பெண் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக வெளியான ஒரு செய்தியை அடுத்து, உயிரிழந்ததாகக் கூறப்படும் 8 தொழிலாளர்களின் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும்,சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பணிக்காக வந்தவர்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில்,போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி,உண்மை நிலையை விளக்கி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.மேலும்,சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோரின் பேச்சுவார்த்தையின் பேரிலும் தனியார் ஆலை முன் 18 மணி நேரமாக தொடர்ந்த பெண் தொழிலார்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. அதன்படி,தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில்,தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும் என்று ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி,ஒப்பந்த தொழிலாளர்களின் சூழ்நிலைகளை மேம்படுத்தவும்,அவசர விடுப்பு கேட்டால் வழங்க வேண்டும் என்றும், மேலும்,அவர்கள் தங்கும் விடுதிகளின் தரத்தை உயர்த்தி தரவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில் கழிவறை குடிநீர்,கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் நிறுவனத்துக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…