தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலின் தலைமையிலான அரசு, தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகளை இடம் மாற்றம் செய்தும், புதிய அதிகாரிகளை நியமித்தும் வருகிறது. அந்த வகையில் தற்போது, தமிழகத்தில் உள்ள 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக காவல் துறையில் காத்திருப்பு பட்டியலில் இருந்த 12 அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னாள் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்பு பட்டியலில் இருந்த பிரதீப் வி பிலிப் தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயந்த் முரளி, பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக ஆபாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்று, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐ.ஜி.யாக ஜெயராம், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக தினகரன், ஆயுதப்படை ஐஜியாக லோகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் ப.மூர்த்தி, மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…