#BREAKING: இலங்கையில் பரபரப்பான அரசியல் சூழல் – நாடாளுமன்றத்தில் 2 நாட்கள் விவாதம்.!

நாளை, நாளை மறுநாள் இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் நாளையும், நாளை மறுநாளும் விவாதம் நடைபெறும் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கையில் பரபரப்பான அரசியல் சூழலில், அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு நாடாளுமன்ற சபாநாயகர் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, மதியம் 2 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் 2 நாட்கள் விவாதம் நடத்த முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025