சென்னையில் மழைநீர் சேகரிப்பு குழியில் விழுந்த 3 பேரில் இருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஒருவரை மீட்கும் பணி தீவிரம்.
சென்னையில், வண்ணாரப்பேட்டையில் தாண்டவராயன் தெருவில் புதிதாக கண் மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது .கட்டிடத்தின் பின்புறத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க குழி தோண்டும் பணியில் 5 பேர் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென்று மண் சரிந்ததில் விழுப்புரத்தை சேர்ந்த வீரப்பன், ஆகாஷ் மற்றும் சின்னத்துரை ஆகியோர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஆகாஷையும், வீரப்பனையும் உயிருடன் மீட்டனர். வீரப்பன் மற்றும் ஆகாஷ் இருவரையும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், சின்னத்துரையை மீட்கும் பணியில் கடந்த 2 மணி நேரமாக தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அவரை மீட்டுள்ளனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…