பொங்கல் தொகுப்பில் ஊழல், தரமற்ற பொருட்களை வழங்கியதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அப்பட்டமான பொய் கூறுவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்ற பொருள்களின் அளவு குறைந்தும், தரமற்றதாகவும் விநியோகிக்கப்பட்டது.
சுமார் ரூ.1,300 கோடி மதிப்பில் பொங்கல் தொகுப்பில் இடம்பெற்ற பொருள்கள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கப்பட்டு இருந்த போதும் சுமார் ரூ.500 கோடி மதிப்பில் மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, குறுகிய காலத்தில் 2.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் தரமாக வழங்க உரிய விலைப்புள்ளி கோரப்பட்டது. இந்நிலையில், பொங்கல் தொகுப்பில் ஊழல், தரமற்ற பொருட்களை வழங்கியதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அப்பட்டமான பொய் கூறுவதாக தெரிவித்துள்ளார். மேலும், வெளிப்படையான டெண்டரால் ஒரு கொள்முதலில் ரூ.74.75 கோடி மீதப்படுத்தப்பட்டுள்ளது என்றும், ஆதாரமற்ற குற்றசாட்டை முன்வைத்துள்ள ஈபிஎஸ் என்னுடன் விவாதிக்க தயாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…