திமுக 10 ஆண்டுகளாக ஆட்சிக்கு வர முடியாமல் தவித்து வருகிறார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இலவச வாஷிங்மெஷின் போன்ற திட்டங்களை நிறைவேற்ற மாதந்தோறும் ரூ.5,000 கோடியும் வருடத்திற்கு 50 முதல் 60 கோடி ரூபாய் தேவைப்படும். பணத்திற்கு எங்கே செல்வார்கள் என்று கேள்வி எழுப்பி, வாஷிங்மேஷனில் வாஸ் பண்றதுக்கு கூட தண்ணீர் இல்லை என விமர்சித்துள்ளார்.
மீண்டும் ஆட்சிக்கு வரப்போவது இல்லை என்று ஆளும் கட்சியான அண்ணன் பழனிசாமிக்கு தெரியும். அடுத்து வருபவர்கள் மாட்டிக்கொள்ளட்டும் என மக்களை ஏமாற்றும் திட்டங்களை அறிவித்துள்ளார். திமுக 10 ஆண்டுகளாக ஆட்சிக்கு வர முடியாமல் தவித்துகொண்டியிருக்கிறார்கள். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், வீட்டில் இருக்கும் ஒரு துணியை கூட விடமாட்டார்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
உண்மையான அம்மாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், நல்ல சிந்தித்து வாக்களியுங்கள். சிலர் பணம் பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், மக்கள் வரி பணத்தை தான் கொடுக்கிறார்கள். அவர்களது சொந்த பணத்தை தருவதில்லை. ஆகையால், பணத்தை வாங்கிக்கொண்டு நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள், அப்பதான் நாளை சென்று எதுவாக இருந்தாலும் கேட்க முடியும் என கூறியுள்ளார்.
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…