பாம்பனுக்கு மிக அருகில் “புரேவி” 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்!

புரேவி புயல், அடுத்த 3 மணி நேரத்தில் பாம்பனை கடந்து சென்று, தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை குமரி – பாம்பன் இடையே கரையை கடக்கும்.
வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்று, இலங்கை திரிகோணமலை பகுதியில் நேற்று இரவு கரையை கடந்தது. இதனையடுத்து இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன் – குமரி இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புரேவி புயல், தற்பொழுது பாம்பனுக்கு முக அருகில் நிலைக் கொண்டுள்ளதாகவும், இதனால் அடுத்த 3 மணிநேரத்தில் பாம்பனை கடந்து செல்லும் எனவும், அப்பொழுது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பின் தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025