மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நடிகர் நாசர் அவர்களின் மனைவி கமீலா நாசர் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்ட கட்சி தான் மக்கள் நீதி மய்யம். இந்த கட்சியில் பல்வேறு திரையுலக பிரபலங்களும், சமூகப் பணியாளர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், சினேகன், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் கட்சியில் உள்ளனர். தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கவிஞர் சினேகன், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலர் தேர்தலில் வேட்பாளராக களமிறக்கப்பட்டனர். நடிகர் நாசர் அவர்களின் மனைவி கமீலா நாசர் அவர்கள் சென்னை மண்டலத்தில் மாநிலச் செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார்.
தற்பொழுது இவர் தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளாராம். இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நமது கட்சியின் சென்னை மண்டல மாநில செயலாளர் திருமதி கமீலா நாசர் அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட காரணங்களால் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார் எனவும், 20-04-2021 முதல் அவர் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை இதன் மூலம் தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம் என கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் சந்தோஷ் பாபு அவர்கள் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…