ஆன்லைன் வகுப்புக்காக, சென்னையில் தகவல் தொழிநுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய கென்சில் செயலி.
இந்தியா முழுவதும் வைரஸின் தாக்கம் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூமாக தான் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகளின் போது சில அத்துமீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், சென்னையில் தகவல் தொழிநுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து, ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்கவும், நெறிமுறைப்படுத்தவும் கென்சில் என்ற செயலியை உருவாக்கியுள்ளனர்.
இளைஞர்கள் இந்த செயலியை இந்திய கல்வி முறையை அடிப்படையாக கொண்டு, வடிவமைத்துள்ளனர். நேர அட்டவணை, வீட்டுப்பாடம் பதிவேற்றும் வசதி, ஆன்லைன் தேர்வுகள், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது, மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடுவது, பள்ளி கட்டணம் செலுத்துவது என அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து செயலியை வடிவமைத்துள்ளனர்.
இந்த செயலியில், வகுப்புகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டு, கிளவுடில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மேலும், வகுப்புகள் தொடங்குவதற்கு முன் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து ஒடிபி வரும். அந்த ஒடிபியை பதிவு செய்து தான் மாணவர்களால் வகுப்பில் இணைய முடியும். மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ யாருடைய தொலைபேசி எண்ணும் தெரிய வராது என்பது இந்த செயலியின் சிறப்பம்சம்.
இந்த செயலியை 8 பேர் கொண்ட குழு உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலியை சென்னை மற்றும் வேலூரில் உள்ள 35 பள்ளிகள் பயன்படுத்தி வருகின்றது. மேலும் சில புதிய அப்டேட்டுகளுடன், அரசுப்பள்ளிகளுக்கும் இந்த செயலியை கொண்டு சேர்க்க இந்த குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது. இதில் பலர்…
சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமான…