கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறியாகியில், கொரோனா நோய் தொற்று காரணமாக, உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மதிப்பெண்கள் வழங்கி
இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல் ஆண்டிற்குச் செல்ல நான் 23.7.2020 அன்று உத்தரவிட்டிருந்தேன். அதன் அடிப்படையில், உயர்கல்வித்துறை 27.7.2020 அன்று விரிவான வழிகாட்டுதல்களை வழங்கி அரசாணை வெளியிட்டது. தற்போது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் நலன் கருதி,தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப்பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணாக்கர்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந் விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும்.இது குறித்து விரிவான ஒரு அரசாணை வெளியிட உயர்கல்வித் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…
டெல்லி : டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து…
சென்னை : நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் பணியில் பிசியாக உள்ள நிலையில், அவரது 50வது…