கொரோனா தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்துவதன் காரணமாக சமுதாயம், அரசியல்,மதம் சார்ந்த கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள்,கல்வி சார்ந்த விழாக்களை நடத்த வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது . ஆனால் கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்திருந்தது .
அதில் தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை வரும் 16-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும், மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாயம், அரசியல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் 100 பேர் வரை நவம்பர் 16-ஆம் தேதி முதல் பங்கேற்கவும், பொழுதுபோக்கு பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவைகள் 10-ஆம் தேதி முதல் திறக்கவும் அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டது.
இதில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து எதிர்ப்புகள் நிலவி வந்த நிலையில், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு தற்போது பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்படுவதாகவும், கல்லூரிகளில் முதுகலை இறுதியாண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கும், அனைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்கும் மடடிசம்பர் 2-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும்,பிற மாணவர்களுக்கு ஏற்கனவே நடைபெற்று வரும் இணையவழி கல்விமுறை தொடரும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது .
மேலும் பண்டிகை காலங்கள் என்பதால் கடைகளுக்கு செல்லும் போது முககவசம் அணியாமலும்,சமூக இடைவெளியை பின்பற்றாமலும் உள்ளனர் . அது மட்டுமின்றி கொரோனா நோய் தொற்றானது இரண்டாம் அலையாக வெளிநாடுகளில் பரவி வரும் சூழலை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் நிலவியுள்ளது . எனவே மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சமுதாயம், அரசியல், மதம் சார்ந்த கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்களை நடத்த வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…