தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஒரு சில மாவட்டங்களில் இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில் அநேக இடங்களில் வேட்பாளர்களின் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலும் திமுக முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள மாயாகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, சுயேட்சை வேட்பாளர்களாக பஞ்சவள்ளி, சரஸ்வதி ஆகியோர் போட்டியிட்டனர். இதனையடுத்து முத்துப்பேட்டை கௌசானல் கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில், இருவரும் தலா 664 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்ததால், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
அதிலும் இருவரும் சமவாக்குகள் பெற்று இருந்ததால், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் முன்னிலையில் குலுக்கல் முறையில் வெற்றி வேட்பாளராக சரஸ்வதி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு மற்றொரு வேட்பாளர் பஞ்சவள்ளி அதிருப்தி தெரிவித்தார். தேர்தல் விதிமுறை படி இருவரின் ஒப்புதலோடு குலுக்கல் முறையில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…