இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று இரவு பதிவு ஒன்றை பதிவிட்டார். அந்த பதிவு யாரும் எதிர்பாராத வகையில் இருந்தது.ஏனென்றால் தோனி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னையில் இருந்தபடி அறிவித்தார்.
அவர் தன் பதிவில் தன் மீது அன்பு காட்டி ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என கூறியிருந்தார். தோனியின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தோனியின் ஓய்வு குறித்து பல அரசியல் தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உடன் தோனி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, மகேந்திர சிங் தோனி நெருக்கடியான தருணங்களில் தளராமல் வெற்றியை நோக்கி வழிநடத்திய கேப்டன் கூல், கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது, என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது சர்வதேச ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளிலும் ஓய்வை அறிவித்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…