Captain Vijayakanth [File Image]
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலை 6.30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி.! அரசு மரியாதை அறிவிப்பு.!
அதன்பிறகு அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் தொண்டர்கள் என பலரும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
விஜய்காந்த் உடலுக்கு அரசு மரியாதை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக அறிவித்து இருந்தார். அதன்படி, நாளை மாலை 4.30 மணியளவில், விஜயகாந்த் உடல் தேமுதிக கட்சி அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…