கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம்…வழிநெடுக மக்கள் கண்ணீர் அஞ்சலி.!

Published by
கெளதம்

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு தொண்டர்கள், ரசிகர்கள், சக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் செலுத்தி வருகின்றனர்.

அவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (29.12.2023) வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு மேல் அவருக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு கட்சி அலுவலகத்திலேயே அடக்கம் செய்யப்படவுள்ளது.

விஜயகாந்த் இல்லத்தில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேமுதிக கொடி..!

இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து விஜயகாந்தின் உடல், மக்கள் வெள்ளத்தில் சுமார் 2 மணி நேரமாக இறுதி ஊர்வலம் நடந்து வந்த நிலையில், தற்போது, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலதில் மக்களுடன் அவரது இரு மகன்கழும் நடந்தே வந்தனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்…!

உரை பெட்டியில் அவருக்கு மிகவும் பிடித்த வேஷ்டி – சட்டை, கையில் வாட்ச், மோதிரம், கருப்பு கண்ணாடி, தேமுதிக துண்டு உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மறைந்த பிறகும், அவருக்கு மாஸ்க் போடப்பட்டுள்ளதால், அவரது முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை என ரசிகர்களும் தொண்டர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

Recent Posts

தகவல்கள் திருட்டு? கூகுள் நிறுவனத்துக்கு 2,620 கோடி அபராதம் போட்ட அமெரிக்க நீதிமன்றம்!

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…

26 minutes ago

பான் கார்டு விண்ணப்பம் செய்யணுமா? அப்போ ஆதார் கட்டாயம்…மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…

1 hour ago

“1.6 கோடி மக்கள் அபாயத்தில் உள்ளனர்”..ட்ரம்ப் நிறைவேற்றிய Medicaid மசோதாவில் டென்ஷனா ஒபாமா!

வாஷிங்டன் :  அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…

2 hours ago

அடிச்சா அடி இடிச்சா இடி…சதம் விளாசி சாதனைகளை படைத்த கேப்டன் கில்!

இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…

2 hours ago

என்னை மிரட்டுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்க! டிஜிபிக்கு கடிதம் எழுதிய வீடியோ எடுத்த நபர்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

3 hours ago

கவலைப்படாதீங்க தவெக உடன் இருக்கும் – தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

சிவகங்கை  : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

3 hours ago