இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்கு பதிவு..!

சேலத்தில் நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கடந்த 12 ஆம் தேதி போராட்டம் நடந்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால், கடந்த 8-ஆம் தேதி குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி உயிரிழந்ததை தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த போராட்டம் நேற்று நடைபெற்றது.
நேற்று போராட்டத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, சேலம் என்றால் அது அதிமுகவின் கோட்டை ; அதிமுகவை எவராலும் அசைத்து பார்க்க முடியாது. அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது. 7 மாதகால திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். திமுக மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்துள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில், சேலத்தில் நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவ காரணமாக இருத்தல் உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025