தமிழகத்தில் கொரோனா காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தபப்ட்டுள்ளது. அவசரம் மற்றும் மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. தேவையில்லாமல் வெளியில் வருபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இன்று சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தேவையின்றி காரில் வந்த பெண்களை போலீசார் விசாரித்தனர். அதில் ஒருவர் போலீசாரை ஒருமையில் பேசத்தொடங்கினார். இதுகுறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து போலீசாரை மிரட்டிய புகாரில் பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எனக் கூறி ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசாரை மிரட்டியதாக மீது புகார் கொடுக்கப்பட்டது.
கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…