கல்லூரிகளில் சாதிய பாகுபாடு – 3 பேராசிரியர்கள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சாதிய பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்களை பணியிட மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை, வியாசர்பாடி, கும்பகோணத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 3 பேராசிரியர்களை நீலகிரி கூடலூர் கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வியாசர்பாடி கல்லூரி பேராசிரியர் ரவி மயிசின், சிவகங்கை கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணன் மற்றும் கும்பகோணம் அரசு கல்லூரி பேராசிரியர் சரவண பெருமாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களிடையே சாதிய பாகுபாடு காட்டி மோதல்களை உருவாக்கும் வகையில் செய்யப்பட்டதாக 3 பேராசிரியர்கள் மீது புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, சாதிய பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்களை பணியிட மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அரசு கல்லுரிகளில் சாதிய பாகுபாட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.