இந்த 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….வானிலை மையம் எச்சரிக்கை.!!

வங்க கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது வரும் 8ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதால் சென்னையில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர்,அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
மேலும், அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.