heavy rain [Image source : AFP]
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல பகுதிகளில் மழையானது பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை:
இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 -4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஓட்டியே இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து…
சென்னை : அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக,…
சென்னை : தென்னிந்தியபகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி -…
ஜார்ஜியா : இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி இந்த ஆண்டு FIDE மகளிர் செஸ் உலகக் கோப்பையில் வரலாறு…
பக்ரியா : சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் காலித் பின் தலால் அல்-சவுத், ''தூங்கும் இளவரசர்'' என்று…
ஆந்திரா : ஆந்திராவில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரும்…