தி.மு.க-வில் இணையும் அன்வர் ராஜா.! அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் அறிவிப்பு.!
முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைய அன்வர் ராஜா அண்ணா அறிவாலயம் வந்துள்ள நிலையில், அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னை : அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்ததிலிருந்து கடும் அதிருப்தியிலிருந்த அவர், பல்வேறு எதிர்மறை கருத்துக்களையும் கூறி வந்தார்.
இந்நிலையில், இன்று காலையிலேயே அவர் அண்ணா அறிவாலயத்திற்கு சென்றுள்ளார். அவர் இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் முன்னிலையில் மு.க. ஸ்டாலின் திமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதிமுகவில் அன்வர் ராஜா இருந்து நீக்கப்பட்டார்.
அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அன்வர் ராஜா வகித்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அன்வர் ராஜா முன்னதாக அதிமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். 2021-ல் கட்சி கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
பின்னர், 2023-ல் மன்னிப்பு கடிதம் அளித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார். தற்போது, அவர் திமுகவில் இணையப்போகும் செய்தி அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.