20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி அரேபியாவின் ‘தூங்கும் இளவரசர்’ காலமானார்.!

தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத் மரணமடைந்தார்.

Saudi Arabia's 'Sleeping Prince

பக்ரியா : சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் காலித் பின் தலால் அல்-சவுத், ”தூங்கும் இளவரசர்” என்று பிரபலமாக அறியப்படுகிறார். அவர் நேற்று முன் தினம் இரவு தனது 36 வயதில் காலமானார், இந்த மரண செய்தியை அவரது தந்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

இளவரசர் காலித் கடந்த 2005-ம் ஆண்டு லண்டனில் ராணுவக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட கார் விபத்தில் மூளைக் காயம் அடைந்து கோமாவில் ஆழ்ந்தார். அப்போதிலிருந்து கடந்த 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வந்ததால், கோமாவில் இருந்த அல்-வலீத் பின் காலித்தை பொதுமக்கள் தூங்கும் இளவரசர் என அழைத்து வந்தனர்.

ஏப்ரல் 1990 இல் பிறந்த இளவரசர் அல் வலீத், சவுதி அரேபியாவின் முக்கிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் கலீத் பின் தலால் அல் சௌத்தின் மூத்த மகனும், கோடீஸ்வரர் இளவரசர் அல் வலீத் பின் தலாலின் மருமகனுமாவார்.

ரியாத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் 20 ஆண்டுகள் பராமரிக்கப்பட்டு வந்தார். அவரது தந்தை, இளவரசர் காலித் பின் தலால் அல் சவுத், மகன் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையுடன் உயிர்காக்கும் சாதனங்களை நீக்க மறுத்து, தொடர்ந்து பராமரித்து வந்தார்.

இருப்பினும், அது பலனளிக்காமல் நேற்று முன் தினம் இளவரசர் உயிரிழந்தார், இதை அவரது தந்தை உறுதிப்படுத்தினார். இளவரசரின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றன, மேலும் பக்ரியா மாவட்டத்தில் உள்ள அரண்மனையில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை வரை வைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்