மே தினத்தை முன்னிட்டு நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்.!

நாளை மே தினத்தை ஒட்டி, சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே அஅறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூர் – விழுப்புரம் இடையேயான ரயில் பாதையில் வேலை நடைபெறுவதால் புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றபடுகிறது. பகல் 12.30 மற்றும் 12.50 மணிக்கு புறப்படும் கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில், சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும்.
பிற்பகல் 1.50 மற்றும் 2.25 மணிக்கு செங்கல்பட்டு – கடற்கரை செல்லும் ரயில், சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்றைய ரயில்கள் = (30.04.2023)
கன்னியாகுமரி செல்லும் ரயில்களில் வண்டி எண்: 16127 குருவாயூர் எக்ஸ்பிரஸ் – காலை 9.00க்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு சென்றடையும். வண்டி எண்: 12633 கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் – மாலை 5.20க்கு புறப்பட்டு காலை 5.45க்கு
சென்றடையும்.
வண்டி எண்: 16823 ஆனந்தபுரி எக்ஸ்பிரஸ் – இரவு 8.10க்கு புறப்பட்டு காலை 8.37க்கு சென்றடையும். வண்டி எண்: 22657 தாம்பரம் – நாகர்கோயில்
இரவு 7.30க்கு புறப்பட்டு புறப்பட்டு காலை 7.10க்கு சென்றடையும்.