சென்னை:குற்றம் நடப்பதை காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்பி அன்பரசு,அரசின் சின்னங்களை தவறாகப் பயன்படுத்துகின்றார்.எனவே,அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போட்டோ என்பவர் முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இதனைத் தொடர்ந்து, தேசிய,மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக,காவல்துறை எடுத்த நடவடிக்கையை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி,சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில்,தேசிய,மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு பதிவாகவில்லை எனவும்,மாறாக,தவறான வண்ணங்களில் விளக்குகளை பயன்படுத்தியதாக 4456 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்,இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,குற்றம் நடப்பதை காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும், தேசிய,மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்தியதாக ஒரு வழக்கு கூடவா பதிவானதாக காவல்துறை அறிக்கையில் இல்லை என்று சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையரிடம் காணொலி மூலம் நடைபெற்ற விசாரணையில் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனையடுத்து,கிரிமினல்களும் தேசிய,மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்தி நடவடிக்கைகளிலிருந்து தப்புகின்றனர் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
அதே சமயம்,நாட்டில் அனைவரும் சமமாக பார்க்கப்படுகிறார்களா? என்பதை பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பான வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை தெரிவிப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…
டெல்லி : டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து…
சென்னை : நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் பணியில் பிசியாக உள்ள நிலையில், அவரது 50வது…