சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது என்பதால் மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியவில்லை. அப்படியானால், சமூக இடைவெளியை பின்பற்றப்படாத மதுக்கடைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது. – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது, மாணவர்களுக்கு சத்துணவு மற்றும் முட்டை வழங்க வலியுறுத்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனிமனித இடைவெளியை மாணவர்கள் பின்பற்றுவதில் பிரச்சினை ஏற்படும் என்பதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு முட்டை வழங்க தற்போது முடியாது. என தெரிவித்தார்.
இதனை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ‘ சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது என்பதால் மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியவில்லை. அப்படியானால், சமூக இடைவெளியை பின்பற்றப்படாத மதுக்கடைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது.’ என கேள்வி எழுப்பினர். மேலும், ‘ பள்ளிகளில் வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறையேனும் முட்டை வழங்க வேண்டும் அதனை எப்படி வழங்குவது என்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்.’ எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…