சாலைகளில் முதல்வர் மற்றும் விஐபிக்களின் பாதுகாப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருக்கும் பெண் காவலர்களுக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளதாக என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். அதனை எடுத்து டிஜிபி திரிபாதி அவர்கள் பெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணிக்கு நிறுத்தக் கூடாது என உயர் அதிகாரிகளுக்கு அறிவிப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள முன்னாள் காவலர் கவி செல்வராணி அவர்கள் சாலைகளில் பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்துள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெண் காவலர்களுக்கு ஆண் தாயாக முதல்வர் முக ஸ்டாலின் விளங்குவதாகவும், இதனால் முதல்வர் முக ஸ்டாலின் மீது ஒவ்வொரு பெண் காவலர்களுக்கும் தாய் அன்பும், மதிப்பும், மரியாதையும் அதிகரித்துக் கொண்டே செல்லும் என தெரிவித்துள்ளார். மேலும் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் உயிருடன் இருந்திருந்தால், முதல்வர் முக ஸ்டாலின் சவால்களை சந்திக்கும் சாமர்த்தியத்தை கண்டு வியந்து போய் இருப்பார்கள் எனவும் பாராட்டியுள்ளார்.
மேலும் இது குறித்து பேசியுள்ள அவர், பெண் காவலர்களுக்கு சாலையோர பாதுகாப்பு பணிகளில் இருந்து முதல்வர் விலக்கு அளித்துள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், பல பெண் காவலர்கள் தங்களின் வலியை வெளியில் சொல்ல முடியாத அளவு சூழ்நிலை இருப்பதாகவும், ஆனால் முதல்வர் அனைத்தையும் புரிந்து கொண்டு தான் தற்பொழுது பெண் காவலர்களுக்கு சாலை பாதுகாப்பு பணியில் இருந்து விலக்கு அளித்துள்ளார், அதற்காக முதல்வருக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…