திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Dravida Kazhagam Leader K Veeramani - Tamilnadu CM MK Stalin

77வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி  கொடியேற்றினார் . அதே போல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தின் கொடியேற்றி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அதன் பிறகு பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கௌரவித்து வருகிறார். அதன்படி, திராவிட கழக தலைவர் கீ.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருதினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

வீரதீர செயல்கள் செய்தோருக்கு வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருது எவெரெஸ்ட் சிகரம் ஏறிய விருதுநகரை சேர்ந்த முத்தமிழ்ச்செல்விக்கு வழங்கப்பட்டது. வேலூரை சேர்ந்த வசந்தாவுக்கு அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்