ஊரடங்கு தளர்வு?? தியேட்டர் திறப்பு…. முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

Published by
kavitha

முதலமைச்சர் பழனிசாமி  அனைத்து மாவட்ட  ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் ஊரடங்கு அக்.,31ந்தேதியுடன் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில்  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர் குழுவினருடனும், சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும் மதியம் 2.30 மணிக்கு  முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நவம்பர் மாதம் ஊரடங்கை  நீட்டிப்பதும், புதிய தளர்வுகளை வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.

மேலும் ஆலோசனைக் கூட்டத்தில்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் தற்போது குறைந்து வருகிறது இதனால் பல தளர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முக்கியமாக, தியேட்டர்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க அனுமதி வழங்க வாய்ப்பு  உள்ளதாகவும்  இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும்  மாலை 3.30 மணிக்கு ரங்கராஜன் குழு அறிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
kavitha

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

16 minutes ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

57 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

18 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

18 hours ago