பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்த நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று காலை மத்திய குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 5-ஆம் தேதி மத்திய குழு சென்னை வந்தடைந்தது.தமிழகத்தில் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளது மத்திய குழு.ஆகவே நேற்று முன்தினம் முதல் மத்தியகுழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சென்னை,கடலூர்,வேலூர் ,புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு செய்தனர்.குழுக்களாக பிரிந்து வெள்ள சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
இந்நிலையில் நிவர் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்த நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று காலை மத்திய குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.இந்த ஆலோசனையில் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி கோரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…