இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுறது. மேலும், ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கவும், நோய் மேற்கொண்டு பரவுவதை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த முடக்கத்தால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க, விருப்பம் உள்ளவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக நிதி வழங்கலாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதேபோல மத்திய அரசு சார்பில் பிரதமர் நிவாரண நிதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரு நிதிகளுக்கும் தனிநபர்கள், அரசியல் கட்சிகள், பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என பலரும் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தாராளமாக நிதி தாருங்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்து நிதிகளுக்கும் ரசீது அனுப்பப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் நீங்கள் அளிக்கும் சிறு தொகை, ஏழை – எளிய மக்களைக் காப்பாற்ற பேரூதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…