கனமழையால் பாதிக்கப்பட்ட கன்னியாக்குமரி மாவட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
யாஸ் புயல் எதிரொலியால்,கடந்த சில நாட்களாக கன்னியாகுமரியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வந்தது.அதனால்,கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
இதனையடுத்து,குமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக,மொத்தம் 238 கூரை வீடுகள் மற்றும் 35 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல்,373 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட வேளாண், தோட்டக்கலை பயிர்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது என முதல் நிலை அறிக்கை கூறுகிறது. இதன்காரணமாக,பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசித்த 767 நபர்கள் 16 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உணவு, மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ்,நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி,
இதனைத்தொடர்ந்து,நிவாரணத் தொகையை தாமதமின்றி மக்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…