குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேரணி –  10,000 பேர் மீது வழக்குப்பதிவு

Published by
Venu
  • குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடியுரிமை பதிவேடு முறைக்கும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஆலந்தூரில் பேரணி நடைபெற்றது.
  • பேரணி  நடத்தியதாக  10,000 பேர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும்  தாக்கல் செய்யப்பட்டது .கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்தது.இதனால் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது.இதனை தொடர்ந்து சட்டம் அமலுக்கு வந்தது.இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.இதன் விளைவாக பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி சென்னையில் நடைபெற்றது. இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விசிக தலைவர்  திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.இதன் பின்னர்  பேரணி நடத்திய தொடர்பாக மு.க.ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.பேரணியில் சட்டவிரோத கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை மதிக்காதது, உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.சென்னை ஆலந்தூர் பகுதியில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது குடும்பத்தாருடன் ஆலந்தூர் பேருந்து பணிமனையில் இருந்து பேரணியாக போராட்டம் நடத்தினர்.தற்போது பேரணி  நடத்தியதாக  10,000 பேர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Published by
Venu

Recent Posts

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

4 minutes ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

32 minutes ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

55 minutes ago

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

12 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

12 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

13 hours ago