கத்தி, துப்பாக்கி ஆயுதங்களை கொண்டு கல்லூரி மாணவர்கள் மோதல்.!

- செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது எஸ்ஆர்எம் கல்லூரி. அந்த கல்லூரிக்கு எதிரில் உள்ள கடைகளுக்கு அருகில் கூடியிருந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் திடீரென தாக்கிக்கொண்டனர்.
- இதில் சர்வ சாதரணமாக துப்பாக்கி மற்றும் கத்தியை எடுத்து ஒருவருக்கு ஒருவர் வெட்டி கொண்டனர். இதனால் மற்ற மாணவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்து காட்டங்குளத்தூரில் அமைந்துள்ளது எஸ்ஆர்எம் கல்லூரி. அந்த கல்லூரிக்கு எதிரில் உள்ள கடைகளுக்கு அருகில் கூடியிருந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் திடீரென தாக்கிக்கொண்டனர். இதில் சர்வ சாதரணமாக துப்பாக்கி மற்றும் கத்தியை எடுத்து ஒருவருக்கு ஒருவர் வெட்டி கொண்டனர். இதனைப் பார்த்த மற்ற மாணவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். பின்னர் கையில் கத்தி மற்றும் துப்பாக்கி வைத்து மோதலில் ஈடுபட்ட இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த மாணவர்கள் செல்போனில் பதிவு செய்து வலைத்தளங்களில் பரப்பினர்.
இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு புகார் சென்றுள்ளது. பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் கல்லூரிக்கு சென்று தற்போது விசாரணை மேற்கொண்டும், இந்த வீடியோ காட்சியில் பதிவான மாணவர்களை தேடியும் வருகின்றனர். இதுபோன்று கடந்த வருடம் வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்கலம் என்ற பகுதியில் ஒரு கல்லூரி மாணவன் முக்கேஷ் என்பவரை அவருடைய நண்பர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து துப்பாக்கி சம்பவம் நடந்து வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்துகின்றன. பின்னர் இதுகுறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025