செப்.1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு…! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!

தமிழகத்தில் செப்.1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. அதன்படி, செப்.6-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் செப்.1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
- அனைத்து கல்லூரிகளிலும், வகுப்பறைகள், நாற்காலிகள், விளையாட்டுப்பொருட்கள் மற்றும் ஆய்வகங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.
- மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டு இருப்பது கட்டாயம்.
- மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிக்கு வருகை தர வேண்டிய அவசியம் இல்லை.
- தடுப்பூசி போடாத மாணவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
- நோய் தொற்று உள்ள மாணவர்களை கண்டறிந்தால் அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் சோதனை எடுக்க வேண்டும்.
- பெற்றோர், ஆசிரியர் கூட்டம் கூட்டி கருத்துக்களை கேட்டறிய வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025