கண்டனம் எழுந்தது நியாயமானது – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Published by
Venu

கட்சிக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதால் நான் வாய் திறப்பதாக இல்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

அண்மையில் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி கட்சிக்குள் எழுந்தது.இதனால் முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள் அவரை முதலமைச்சர் வேட்பாளர் என்றும் , துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அவரை முதலமைச்சர் வேட்பாளர் என்று கூறி வந்தனர் .இந்த கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து காரசார விவாதம் நடந்ததாக தகவல் வெளியாகியது.

செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை வருகின்ற 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என அக்கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவைப் பொறுத்தவரை அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கும் முதல்வர் யார் என்பதில் போட்டி கிடையாது. முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை. அடுத்த ஆட்சி அதிமுக தான், அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என கூறினார்.இது மீண்டும் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாகும் .செயற்குழு கூட்டம் பற்றி வெளியில் கருத்து கூறக்கூடாது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது.அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உட்பட யாராக இருந்தாலும் கட்டுப்பாடு ஒன்றுதான். அமைச்சர்களும், தொண்டர்களும் அதற்கு இடம் அளிக்கக்கூடாது என்று கூறினார்.

சர்ச்சை எழுந்த நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், கட்சிக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதால் நான் வாய் திறப்பதாக இல்லை .முதலமைச்சர் வேட்பாளர் குறித்த எனது கருத்துக்கு கண்டனம் எழுந்தது நியாயமானது என்று தெரிவித்துள்ளார். 

Published by
Venu

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

6 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

7 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

9 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

9 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

10 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

11 hours ago