தமிழக முதலமைச்சராக பழனிசாமி 3 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் தேமுதிக நிறுவனத்தலைவரும் , பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசு மூன்று ஆண்டுகளைக் கடந்து விட்டது.இன்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி .நான்காவது ஆண்டு தொடங்கியுள்ளதை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி இந்நிகழ்வை கொண்டாடினார்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சராக பழனிசாமி 3 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் தேமுதிக நிறுவனத்தலைவரும் , பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 3 ஆண்டுகளை கடந்து,4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.இன்னும் ஓராண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எல்லா விதங்களிலும் நல்லாட்சி தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…