திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி – காங்கிரஸ் ஆலோசனை.!

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகள் கேட்கக்கூடிய நிலையில், திமுக 22 தொகுதிகள் மட்டும் ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர் இழுபறியில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனிடையே, நேற்று காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் கேஎஸ் அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் தனித்தனியாக மாவட்ட தலைவர்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டது. இந்த நிலையில் நீற்று மீண்டு திமுக சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இன்று மாநிலத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து தற்போது ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 200க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு குறைவான இடங்களை ஒதுக்க முன்வந்துள்ளது. இந்த இடங்களை நாம் பெற வேண்டுமா? இல்லை மாற்று வழி என்ன செய்வது என்று ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக திமுக ஒதுக்கும் இடங்களை காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டால் இன்று மாலையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. காங்கிரஸ் கேட்டும் 27 தொகுதிகளை திமுக வழங்குமா? இல்லை திமுக கொடுக்கும் இடங்களை காங்கிரஸ் பெறுமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
லேட்டஸ்ட் செய்திகள்
விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!
May 9, 2025
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025